×

ஏலாக்குறிச்சி அருகே சாலையின் நடுவில் முறிந்து விழுந்த ஆலமரம் போக்குவரத்து பாதிப்பு

அரியலூர், மே 15: திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி சாலையில் பழமையான ஆலமரத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மரம் முறிந்து விழுந்ததால் அந்த பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள ஆண்டவர் கோயிலின் தென்புறம் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இந்த கோயிலுக்கு வருபவர்களுக்கு நிழலாகவும், கோயில் மரமாகவும் போற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் வனத்துறைக்கு சொந்தமான இந்த பழமை வாய்ந்த ஆலமரததின் ஒரு பகுதி நேற்று காலை திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. அந்த நேரத்தில் மரத்துக்கு அடியில் யாரும் நிற்காததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலையில் முறிந்து விழுந்த ஒரு பகுதியை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,Elakurichi ,
× RELATED கந்தர்வகோட்டை- தஞ்சை சாலையில் உள்ள...