×

லாலாபேட்டை அருகே சுற்றுச்சுவர் இடிந்து ஆபத்தான அரசு பள்ளி கட்டிடம்சீரமைக்க கோரிக்கை

குளித்தலை ,மே 15: கரூர்மாவட்டம், குளித்தலை அடுத்த லாலாபேட்டை பொதுமக்கள் சார்பில் நாகராஜன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:  கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்  தாலுகா லாலாபேட்டை அருகே கள்ளப்பள்ளியில் ஆதிதிராவிட பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் மேற்கு பகுதியில் உள்ள சுவர் விழுந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அதனால் அந்த கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இது சம்பந்தமாக கலெக்டரிடம்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இரண்டு புகார் மனு தரப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இப்பள்ளி கட்டிடத்திற்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் தற்போதுள்ள பழுதடைந்த கட்டிடத்தின் மேல் பழைய குடிநீர் டேங்கையும், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தையும் நேரடியாக ஆய்வு செய்து புதியதாக கட்டிடம் கட்டித் தரவும், குடிநீர் டேங்கை மாற்றியமைக்கவும் உரிய நடவடிக்கை  வேண்டும் என கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதே போல் லாலாபேட்டை அருகே கொடிக்கால் தெருவில் இருந்து பச்சநாச்சியம்மன் கோயில் இடையில் கள்ளப்பள்ளி ஆதிதிராவிட காலனி பகுதியில் மேல் நீர் தேக்க தொட்டி அருகே உள்ள கருவேலஞ் செடிகள் அதிகமாக இருப்பதால் நச்சுத்தன்மை உள்ள ஜீவன்கள் அதிகமாக உள்ளது. அருகே உள்ள குடியிருப்பு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி புதர் போல் உள்ள ஆதிதிராவிட காலனி பகுதியில் உள்ள கருவேலஞ்செடிகளை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : demolition ,Lalbeth ,state school ,
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...