×

சேத்தியாத்தோப்பு அருகே தூர்ந்து கிடக்கும் குளத்தை தூர்வார மக்கள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு, மே 14: சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது கோதண்டவிளாகம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோயில் அருகில் உள்ள குளமானது 12 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளம் தற்போது தூர்ந்துபோய் ஆகாயத்தாமரைகளால் சூழப்பட்டு வறண்ட நிலையில் உள்ளது. இதனை தூர்வார வேண்டும் என இக்கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, இக்குளத்தில் பலவருடங்களுக்கு முன்பு தண்ணீர் நிரம்பியிருக்கும்போது அந்த தண்ணீரை குடிநீருக்கும், உணவு சமைக்கவும் பயன்படுத்தியிருக்கிறோம்.

அவ்வாறு தூய்மையாக இருந்த குளம் காலப்போக்கில் போதிய பராமரிப்பு இல்லாமல்போனதால் தற்போது தூர்ந்துபோய். இதற்கு தண்ணீர் வரும் வழித்தடமும் மறைந்துபோய் உள்ளது. இக்குளத்தில் தண்ணீர் நிரம்பினால் கிராமமக்கள் பயனடைவதோடு, கால்நடைகளுக்கும் பெரிதும் பயன்படும். அதுமட்டும் அல்லாமல் கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாக்கும்படியாகவும் இருக்கும். அதிகாரிகள் இக்குளத்தை கோடைகாலமான தற்போது ஆய்வு செய்து மழைக்காலம் துவங்குவதற்குள் குளத்தை முழுமையாக தூர்வாரி, குளத்துக்கு வரும் நீர்வழித்தடத்தையும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதே கிராமமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. என்றனர்.

Tags : pond ,Sethiyatope ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்