×

சங்கரன்கோவிலில் ரத்த தான முகாம்

சங்கரன்கோவில், மே 14:  சங்கரன்கோவில் அரசு மருத்துமனையில் ரத்த தான முகாம் நடந்தது. சாரதிராம் அறக்கட்டளை சார்பில் நடந்த இம்முகாமிற்க்கு தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். ரத்த வங்கி மருத்துவ அதிகாரி டாக்டர் செந்தில்சேகர், அகில பாரத ஜயப்பா சேவா சங்கத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ரத்த தான முகாமை சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன் , சாரதிராம் அறக்கட்டளை நிறுவனர் பிஜிபி ராமநாதன்  துவக்கி வைத்தனர்.

 சங்கரன்கோவில் சாரதிராம் அறக்கட்டளை  பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கடந்த கடந்த 8 ஆண்டுகளாக நடத்தி வரும் முகாம்களில் ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் கலெக்டர்  கையெழுத்திட்ட பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. முகாமில் தொழிலதிபர்கள் லட்சுமணன், ஆறுமுகம், சபாரா பாஸ்கர், வைரவன், திருநாவுக்கரசு, சங்கரன், ரவி, பள்ளித் தாளாளர் கணபதி ராமச்சந்திரன், பள்ளித் தலைமையாசியர் பழனிசெல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், அருணகிரி, நடராஜன், குமாரவேல், சங்கரமகாலிங்கம், வக்கில் வெங்கடேஷ், சொர்ணவேல், இளநிலை மின்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன், மின்வாரிய மேற்பார்வையாளர் அரசமணி, சாரதிராம் இறகு பந்து கழக தலைவர் பட்டமுத்து, செஞ்சிலுவை சங்க சங்கரன்கோவில் கிளைத் தலைவர் அரிகர சுப்பிரமணியன், சாரதிராம் அறக்கட்டளை நிர்வாகிகள் லட்சுமிநாராயணன், பழனிக்குமார், சோமசுந்தரம், சுந்தரமுர்த்தி, சிவா, முருகன், செந்தில்குமார், ஈஸ்வரன், சுப்பையா, வெங்கடேஷ், மகாலிங்கம், சிவசுப்பிரமணியன், சண்முகம், சண்முகவேல் ஆவுடையம்மாள் டிரஸ்ட் நிறுவனர் ராஜாமணி  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை சாரதிராம் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

Tags : Blood donation camp ,Sankarankovil ,
× RELATED சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு