×

மகான் காதர் அவுலியா தர்ஹாவில் கந்தூரி விழா கொடியேற்றம்

நெல்லை, மே 14: பாளை குலவணிகர்புரம் மகான் காதர் அவுலியா பள்ளிவாசல் மற்றும் காதர் மீரா பக்ருதீன் தர்ஹா கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதையொட்டி மாலையில் அஸர் தொழுகையும், தொடர்ந்து ஜியாரத் மற்றும் கந்தூரி கொடியேற்று விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு காதர் அவுலியா பள்ளிவாசல் மற்றும் காதர் மீரா பக்ருதீன் தர்ஹா தலைவர் நெய்னா முகம்மது தலைமை வகித்தார். இணை செயலாளர்கள் அப்துல் கரீம், வருசை முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காதர் அவுலியா பள்ளிவாசல் இமாம் அஷ்ரப் அலி ஆலிம் கிராஅத் ஓதினார்.

காதர் அவுலியா பள்ளிவாசல் மற்றும் காதர் மீரா பக்ருதீன் தர்ஹா முத்தவல்லி செயலாளர் முகம்மது ஷாபி வரவேற்றார். பொருளாளர் செய்யது அகமது கபீர், உறுப்பினர் மீரான் முகைதீன், துணை ஆய்வாளர் ஹாஜா இபுராஹிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மதுரை சரகம் ராமநாதபுரம் மற்றும் நெல்லை (கூடுதல் பொறுப்பு) வக்பு கண்காணிப்பாளர் முகம்மது ஷபியுல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உறுப்பினர் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார். கந்தூரி விழா கொடியேற்று நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : festival ,Maha Kadar Aulia Dharah ,
× RELATED பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25...