×

ஆண்டிபட்டி சட்டமன்ற ெதாகுதிக்கு மறுதேர்தல் நடத்த கோரி சுயேச்சை வேட்பாளர்கள் மனு

தேனி, மே 14: ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு மறு தேர்தல் நடத்த கோரி, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சை வேட்பாளர்கள்  மனு அளித்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கடந்த மாதம் 18ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 16 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் வைகை பாண்டியன், பாலகிருஷ்ணன், அழகர்சாமி, கழுசிவலிங்கம், கண்டுக்காரன் ஆகியோர் மாவட்ட தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவியை நேற்று நேரில் சந்தித்து தனித்தனியாக மனுக்கள் கொடுத்தனர்.

அந்த மனுவில், நடந்து முடிந்த ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகளவில் நடந்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதேநேரத்தில் பாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள 67ம் எண் வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த உள்ளது. இது ஜனநாயக படுகொலையாகும். எனவே,  மே 23ம் தேதி நடக்க உள்ள வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி விட்டு, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி முழுவதும் மறுதேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags : reopening ,Andipati Assembly ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது...