×

மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி வாகனங்கள் ஆய்வு புதுகை கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவு.

புதுக்கோட்டை, மே 14: புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டும் விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிடவும், மாவட்ட நிர்வாகம் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி சாலைப் பாதுகாப்பு குறித்து அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடவும், ஒட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்திடவும், அனைத்து பள்ளி வாகனங்களையும் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இதன்படி  16.5.2019  அன்று காலை 9 மணிக்கு புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்களை புதுக்கோட்டை காவல் துறையின் ஆயுதப்படை மைதானத்திலும் மற்றும் அறந்தாங்கி பகுதி அலுவலக எல்லைக்குட்பட்ட வாகனங்களை அறந்தாங்கியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வக  அலுவலக வளாகத்திலும் மற்றும் இலுப்பூர் பகுதி அலுவலக எல்லைக்குட்பட்ட வாகனங்களை இலுப்பூரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வக  அலுவலக வளாகத்திலும் மற்றும் ஆலங்குடி மோட்டார் வாகன ஆய்வக  பகுதி அலுவலக எல்லைக்குட்பட்ட வாகனங்களை ஆலங்குடியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வக அலுவலக வளாகத்திலும் ஆய்வு செய்யப்பட உள்ளது. எனவே ஆய்விற்கு வரும் வாகனங்களோடு அவ்வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிச்சீட்டு, ஒட்டுநர் உரிமம் நடத்துநர் உரிமம் ஆகியவைகளை  அரசு பள்ளி சிறப்பு விதிகளின்படி   அமைக்கப்பட்ட குழுக்களின் ஆய்விற்கு 16.5.2019  அன்று கொண்டுவருமாறு  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி உரிமையாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் இந்தஆய்விற்கு வராத  பள்ளி வாகனங்களின் அனுமதிச் சீட்டினை  ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags : School Vehicles ,Inspectorate ,Umakasevari ,
× RELATED ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு...