×

கரூர் ஏமூர் சாலையில் ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், மே 14: கரூர் ஏமூர் செல்லும் சாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை முத்துலாடம்பட்டி பகுதியில் இருந்து ஏமூர், காந்திகிராமம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையோரம் உள்ள முருகன் நகர் போன்ற பகுதிகளுக்கு மின்விநியோகம் வழங்குவதற்காக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. நீண்ட கால பயன்பாடு காரணமாக, டிரான்ஸ்பார்மரின் அனைத்து பாகங்களும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் டிரான்ஸ்பார்மர் பாதிக்கப்பட்டு, மின்விநியோகம் வழங்குவது தடை செய்யப்படுமோ? என்ற பீதியில் மக்கள் உள்ளனர். மேலும், இந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வேண்டும் எனவும் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை  பார்வையிட்டு சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Transformer ,Karur Emur Road ,
× RELATED தென்மேல்பாக்கம் கிராமத்தில் எலும்பு...