×

₹2.50 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்திவேலூர், மே 10:  பரமத்திவேலூர் அடுத்த வெங்கமேட்டில், சேலம் வேளாண் ஒழுங்குமுறை  விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வாரந்தோறும் வியாழக்கிழமை கொப்பரை ஏலம் நடைபெறும். கடந்த 2ம் தேதி நடந்த ஏலத்தில் ஒரு கிலோ அதிகபட்சமாக ₹93.89க்கும், குறைந்தபட்சமாக  ₹85.69க்கும், சராசரி விலையாக ₹89.79க்கும் ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக  விவசாயிகள் கொண்டுவந்த 2,568 கிலோ கொப்பரை ₹2 லட்சத்து 8 ஆயிரத்து 980க்கு ஏலம் போனது. நேற்றைய ஏலத்தில் ஒரு கிலோ அதிகபட்சமாக ₹91.50க்கும், குறைந்தபட்சமாக ₹88.69க்கும், சராசரி  விலையாக ₹90.50க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த  3,050 கிலோ கொப்பரை ₹2 லட்சத்து 50 ஆயிரத்து 599க்கு விற்பனையானது.


Tags :
× RELATED ₹2 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்