×

டீக்கடைக்காரர் மீது தாக்குதல்

நெல்லை, மே 10:  தலைவன்கோட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர்  கோமதிபாண்டியன் (60). அப்பகுதியில டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும்,  உறவினரான தலைவன்கோட்டையை சேர்ந்த சக்திவேல்(45) என்பவருக்கும் முன்விரோதம்  இருந்து வந்தது. நேற்று முன்தினம் இவர்களிடையே மீண்டும் தகராறு  ஏற்பட்டது. இதில் கோமதி பாண்டியன் தாக்கப்பட்டார். காயமடைந்த அவர்  புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில்  புளியங்குடி எஸ்ஐ குருசந்தவடிவேல் வழக்கு பதிந்து தப்பியோடிய சக்திவேலை  தேடி வருகிறார்.

Tags :
× RELATED செல்போனுக்கு சார்ஜ் போடும் போது...