×

ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது குடிசைகளுக்கு தீ வைத்த இரு நரிக்குறவர்கள் கைது

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், பழைய காவல் நிலையம் அருகே சிடிஎச் சாலையில் சிவசுப்பிரமணியம் என்ற வாசு (58) என்பவருக்கு சொந்தமாக 23 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதி  நரிக்குறவர்கள் ஆக்கிரமித்து குடிசைகள் கட்டி இருந்தனர். இதுகுறித்து வாசு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு தொடர்ந்தார். எனவே போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி நேற்று முன்தினம் அங்கு அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் ஆக்கிரமிப்பை அகற்ற பாதுகாப்பு அளித்தனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த இரு குடிசை வீடுகளை சிலர் தீ வைத்து கொளுத்தினர். இதனை அடுத்து, அதில்  பற்றிய தீயை போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதுகுறித்து புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், குடிசை வீடுகளுக்கு தீ வைத்த நரிக்குறவர்கள் பார்த்திபன் (22), குட்டியப்பன் (35) ஆகியோர் என தெரிந்தது. எனவே போலீசார் நேற்று இருவரையும் கைது செய்துசிறையில் அடைத்தனர்.

Tags : occupants ,looters ,
× RELATED தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய...