×

மழை வேண்டி பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் வருண ஜபம்

பழநி, மே 9: மழை வேண்டி பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் தண்ணீர் தொட்டியில் அமர்ந்து வருண ஜபம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அனல்காற்று வீசி வருகிறது. பல இடங்களில் குடிநீருக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால்தான் இப்பிரசனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கோயில்களில் வருண ஜபம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. அதன்படி பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியநாயகிஅம்மன் கோயிலில் நேற்று வருணஜபம் நடந்தது. சங்கல்பத்துடன் துவங்கிய வருண ஜபம் தொடர்ந்து விநாயகர் பூஜை, புண்யாகவஜனம், பஞ்சகவியம், இறை அனுமதி, கலச பூஜைகள் நடந்தது. பின்னர் வேதபாராயணம், நாதஸ்வர பாராயணம், திருமுறை பாராயண நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து பெரிய நந்திக்கு கழுத்துவரை தீர்த்தம் கட்டுதல், கைலாசநாதருக்கு ருத்ராபிஷேகம், தீர்த்த புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோயிலின் தலைமைகுருக்கள் அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையிலான வேத விற்பனர்கள் கோயிலின் கிழக்கு வெளிபிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் அமர்ந்து வருண ஜபத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலச புறப்பாடு, கலசாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை  ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Palani Panayanayi Amman Temple ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்