×

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் மேட்டூர் ஜிவி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

மேட்டூர், மே 9: மேட்டூர் ஜிவி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேட்டூர் மாசிலாபாளையத்தில் செயல்பட்டு வரும் ஜிவி மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் மோனிஷ் தமிழ்98, ஆங்கிலம்90, கணிதம்100, அறிவியல்99, சமூகஅறிவியல்99 என 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மேலும், மாணவர் ஸ்ரீவிஷ்ணு தமிழ்96, ஆங்கிலம்96, கணிதம்96, அறிவியல்97, சமூக அறிவியல்100 என 485 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பிடித்தார். மாணவர் நந்தகுமார் தமிழ்97, ஆங்கிலம்93, கணிதம்99, அறிவியல்95, சமூக அறிவியல்99 என 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாமிடம் பிடித்துள்ளார்.

கணிதத்தில் ஒருவரும், சமூக அறிவியலில் இரண்டு மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், மாணவ, மாணவிகள் 25 பேர் 450க்கு மேலும், 50 பேர் 400க்கு மேலும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமலிங்கம், தாளாளர் அன்பழகன் மற்றும் இயக்குநர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Mettur Govi Higher Secondary School ,
× RELATED தீ பிடித்து கடைக்காரர் சாவு