×

துலுக்கம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அப்புறப்படுத்த கோரிக்கை

கந்தர்வகோட்டை, மே 9: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் காட்டுநாவல் ஊராட்சியில் துலுக்கம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி புதிதாக கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவையான கட்டிடங்கள் சேதமடைந்தும், தேவையில்லாத கட்டிடங்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராதிருப்பது பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கந்தர்வகோட்டை ஊராட்சி காட்டுநாவலில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி தற்போது சிதிலமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் சிதிலமடைந்த நீர்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்டிக்கொடுத்த பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை காட்டுநாவலில் பெரியார் காலனியில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : removal ,collapse ,Tulu Kumbhampatti ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...