×

நுகர்வோர் சங்கம் கோரிக்கை வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டும்

ஜெயங்கொண்டம், மே 9: அரியலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்  தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்க பொதுசெயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் தியாகராஜன், முகம்மதுசுல்தான் ஆகியோர் தீர்மானங்களை விளக்கி பேசினர். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சிட்க்குட்பட்ட ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையை பலப்படுத்தி தூர்வார வேண்டும். மேலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை நேரடியாக ஏரியில் விடுவதை நகராட்சி தடுக்க வேண்டும்.

ஏரிக்குள் வரும் மழைநீர் வரத்து வாய்க்காலை சீரமைத்து ஏரியை தூய்மையாக வைத்திருக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயங்கொண்டம் நகராட்சியில் 4 மற்றும் 5வது வார்டுகளில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் சிதிலமடைந்த பள்ளிக்கட்டிடங்களை சீரமைத்து குழந்தைகளின் நலன் காக்க வேண்டும். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மாவட்ட நிர்வாகத்தினால் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டு கடந்த ஒரு ஆண்டு காலமாக பூட்டி கிடைக்கும் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாரிவள்ளல் வரவேற்றார். கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags : Consumers Union ,
× RELATED உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை...