×

ஆண்டிபட்டி தொகுதியில் மறுவாக்குப்பதிவு கூடாது வாக்குச்சாவடி முகவர் கலெக்டரிடம் மனு

தேனி, மே 9: ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் 67வது வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு நடத்தக்கூடாது என திமுக முகவர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
ஆண்டிபட்டி சட்டமன்றத்தொகுதி திமுக வேட்பாளர் மகாராஜனுக்கு தேர்தல் முகவராக இருப்பவர் ராஜாராம். இவர் நேற்று கலெக்டர் பல்லவிபல்தேவிடம் அளித்த மனுவில், பாலசமுத்திரம் 67 வது வாக்குச்சாவடியில் நான் திமுக வேட்பாளருக்கு முகவராக பணிபுரிந்தேன். கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவின்போது காலையில் மாதிரிவாக்குப்பதிவு நடந்தது. அப்போது வாக்குப்பதிவின்போது விழுந்த அனைத்து ஒப்புகை வாக்குச்சீட்டுக்களையும் தனியாக ஒரு கவரில் வைத்து பின்புதான் வாக்குப்பதிவு ஆரம்பிக்க வேண்டும்.


 பின்பு விவிபேட் இயந்திரத்தையும் சீலிட்ட பின்னர்தான் வாக்குப்பதிவு ஆரம்பிக்க வேண்டும். ஆனால் மறதியாக அங்கிருந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர் தொடர்ந்து வாக்குப்பதிவினை நடத்தியதால் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது அங்கே வந்த போலீஸ் எஸ்.பி பாஸ்கரனிடம் முறையிட்டோம். அதற்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டாம்; தொடர்ந்து வாக்குப்பதிவினை நடத்துங்கள் என்றபிறகுதான் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மாற்றப்பட்டு தொடர்ந்து தேர்தல் நடந்தது. அங்கு 81 சதவீத வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில் தற்போது, இவ்வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். எனவே, போலீஸ் எஸ்.பி வழிகாட்டுதலின்படி நடந்த இத்தேர்தலை ரத்து செய்து அந்த வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்.

Tags : constituency ,Andipati ,
× RELATED திருப்பூர் தெற்கு தொகுதியில் அரசு...