×

மாங்காய்களை பழுக்க வைக்க கார்பைடு கல் பயன்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

நாகை, மே.9: பழங்களை பழுக்க வைக்க கார்பைடு கல் பயன்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாம்பழ விற்பனை சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு  கல் போன்ற ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதாக கிடைத்த தகவலின்  பேரில்  மாநில உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவின் போரில் நாகை மாவட்ட   உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலெட்சுமி  வாழிகாட்டுதல்படி  நாகை  மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாம்பழ  குடோன்கள் மற்றும் விற்பனை இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

நாகை  நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு  மேற்கொண்டார். பின்னர் பின்னர் அவர்  செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், ரசாயனங்கள் கொண்டு பழங்களை   பழுக்கவைப்பது அதனை சாப்பிடுவர்களுக்கு பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்துகிறது.  கார்பைடு கல் உள்ளிட்ட ரசாயனங்களை கொண்டு பழங்களை பழுக்கவைக்க கூடாது.  அதே நேரம் எத்திலின் வாயுவை பழங்களை பழுக்க வைக்க உணவு பாதுகாப்புத்துறை  வழிகாட்டியுள்ளபடி பயன்படுத்தலாம்.

இயற்கையான பாரம்பரிய முறைப்படி பழங்களை  பழுக்க வைப்பதே சிறந்தது ஆகும். மீறி  சட்ட விரோதமாக செயல்படுவது பழ  விற்பனையார்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் பழங்கள் முழுவதையும்  பறிமுதல் செய்வதோடு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011ன்படி சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவு  விற்பனை தொடர்பான புகார்களை 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்பு  ஆணையகரத்தில் புகார் எண்ணில்  தெரிவிக்கலாம் என்றார்.

Tags : Food Safety Officer ,
× RELATED சாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்