×

அனைத்து கோயில்களிலும் மழை வேண்டி சிறப்பு பூஜை

ராமநாதபுரம், மே 9: மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மழை வேண்டி வருண ஜெப வேள்வி நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் போதிய மழையின்றி வறட்சி நிலவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழை இல்லை. கண்மாய் குளங்கள் வறண்டுவிட்டன. கிராமங்களில் கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாநில இந்து சமய அறநிலையத்துறை நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த அறநிலையத்துறையின் கீழ் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம். சமஸ்தானம். தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மற்றும் தனிநபர், சமுதாயத்தினர்கள் நிர்வாகத்தில் சுமார் 523 கோயில்கள் உள்ளன. ராமநாதபுரம் நகரில் 10க்கும் மேற்பட்ட பெரிய கோயில்கள் உள்ளன. அனைத்து கோயில்களிலும் மழை வேண்டி யாகம் நடத்தி, வரும் ஆண்டில் நல்ல மழைபெய்து நகரவாசிகள், விவசாயிகள் வளம் பெற வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Tags : temples ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு