×

ரோஜா பூங்கா சாலை சீரமைக்க கோரிக்கை

ஊட்டி, மே 9: ஊட்டி ரோஜா பூங்கா செல்லும் சாலை பழுதடைந்துள்ளதால், அதனை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி ரோஜா பூங்கா செல்லும் சாலை பல இடங்களில் பழுதடைந்துள்ளது. பூங்கா நுழைவு வாயில் பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, ரோஜா பூங்கா செல்லும் சாலையில் அலங்கார் முதல் பாம்பேகேசில் சந்திப்பு வரை சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் ரோஜா பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : park road ,
× RELATED குடிநீர் வாரிய ஊழியர்கள் போராட்டம்