×

ெதன் மாநில அளவிலான கராத்தே போட்டி

கோவை, மே 9:கோவை பேரூர் தீத்திபாளையத்தில் ஜப்பான் ஹயாஷிஹா கராத்தே கிளப் மற்றும் சிஎம்சி பள்ளி இணைந்து தென் மாநில அளவிலான கராத்தே போட்டியை நடத்தியது. போட்டியை பள்ளியின் முதல்வர் சரவணகீதா துவக்கிவைத்தார். இதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலத்தை சேர்ந்த சுமார் 450 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பெரியவர்கள், சிறியவர்களுக்கு கட்டா மற்றும் சண்டை பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில், மாணவிகள் 7 வயது சண்டை பிரிவில் நிதர்சிகா, ஐஸ்வர்யா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
 கட்டா பிரிவில் வனிஷா, மேகா ஆகியோரும், 6 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் துஷ்யந்த், பிரஜித், 8 வயது பிரிவில் தேவ், தினேஷ் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். 10 வயது பெண்கள் கட்டா பிரிவில் தர்ஷனா, அனிஷா, தேவி பிரியா ஆகியோரும், ஆண்கள் பிரிவில் பிரதீப், புவனேஸ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை பள்ளியின் தாளாளர் நாதன் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களை பைட்டர்ஸ் அகடாமியின் தலைவர் ரமேஷ்குமார், சிவராஜ், கவுசல்யா ஆகியோர் பாராட்டினர்.

Tags : state level karate competition ,
× RELATED கம்பத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி