×

ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தீவிரம்

பொள்ளாச்சி, மே 8: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடக்கிறது.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தாலுகா,  ஆனைமலை ஊராட்சி ஒன்றிய குக்கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்யும் வகையில், 6 வயது முதல் 15 வயது வரையிலான பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட 6 முதல் 18வயது வரையுள்ள குழந்தைகளையும் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி கடந்த மாதம் துவங்கியது.

இதில் நேற்று,  ஆழியார் மற்றும் பந்தகாலம்மன் கோயில், மண்ணம் உள்ளிட்ட பல பகுதிகளில் 6 முதல் 18 வயதிற்குட்பட்டோர், இதுவரை யாரேனும் பள்ளி செல்லாமல் உள்ளார்களா என கணக்கெடுக்கப்பட்டது. இந்த பணியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம், ஆசிரிய பயிற்றுனர்கள் செந்தில்குமார், சொப்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து வட்டார கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘ஆனைமலை ஒன்றியம் 19 ஊராட்சி  கிராம பகுதிகளில், இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்யும் வகையில், பள்ளி செல்லா குழந்தைகளே இருக்க கூடாது என்ற நோக்கத்தில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.  இதில் ஆசிரியர்கள் மட்டுமின்றி, அங்கன்வாடி பணியாளர், ஆசிரிய பயிற்றுனர்கள், உள்ளிட்ட பலர் தனித்தனிக் குழுக்களாக சென்று கணக்கெடுக்கும் பணியில்  ஈடுபடுகின்றனர்.

ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், தற்போது வரை பள்ளி செல்ல குழந்தைகள் 25 பேர், மாற்றுத்திறனாளி குழந்தைகள் 5பேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பணி, வரும் 15ம் தேதி வரை நடக்க உள்ளது. அதன்பின், பள்ளி செல்லா குழந்தைகள் எத்தனை, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் எத்தனைபேர் உள்ளனர் என்பது குறித்து முழுமையாக தெரியவரும்’ என்றனர்.

Tags : intersection ,children ,school ,regions ,ANIMALI Union ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...