×

கூடலூர் அருகே கந்துவட்டி வழக்கில் போலீஸ்காரர் மனைவி கைது

கூடலூர்,மே8: கூடலூர் போலீஸ்காரர் மனைவி மீது கந்துவட்டி வழக்கு பதிவு செய்து மசினகுடி போலீசார் அவரை கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியில் கடந்த மாதம் 5ம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த ஒருவரிடம் சோதனை செய்தபோது அவரிடம் ஏராளமான ஆதார், ஏடிஎம் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு இருந்தது.

இதையடுத்து, அதை வைத்திருந்த தினேஷ் என்பவர் மீது மசினகுடி காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்து அவற்றை ஒப்படைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தினேஷ் மசினகுடியை சேர்ந்தவர் என்பதும், இவர்கள் கந்துவட்டிக்கு பணம் கொடுப்பது. மேலும் பணத்தை வட்டிக்கு பெறும் நபர்களிடமிருந்து இந்த அடையாள அட்டைகள், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகளை வாங்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக பைனான்ஸ் நடத்தி வரும் கூடலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் மகாலிங்கம் என்பவரது மனைவி சாரதாவிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

பின்னர் அவர் மீது அதிக வட்டிக்கு பணம் கொடுத்தல் மற்றும் அடையாள அட்டை, ரேஷன்கார்டுகளை வாங்கி வைத்து மக்களை மிரட்டி ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சாரதா கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்த தினேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : Kandavatti ,Kodalur ,
× RELATED அரூர் அருகே கந்துவட்டி கொடுமை செய்வதாக குடும்பத்துடன் தொழிலாளி புகார்