×

விசிக., நிர்வாக குழு கூட்டம்

ஊட்டி, மே 8:  விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாக குழு மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள் கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மண்ணரசன், நாடாளுமன்ற செயலாளர் ராஜேந்திர பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டார வரவேற்றார். ஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு லாட்ஜ் கட்டணம் பல மடங்கு உயர்த்தி சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்டுக் கொள்வதில்லை. கட்டண கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊட்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். குறைந்த அளவிலான தூய்மை பணியாளர்களை வைத்து வேலை பளுவை அதிகரிக்க கூடாது. ஊட்டி நகரில் உள்ள கழிப்பிடங்களில் ரூ.10 வரை சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளிடம் அதிகம் கட்டணம் வசூலிப்பது தவறு. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வண்மையாக கண்டிக்கிறது. சேரிங்கிராஸ் பகுதியில் 24 மணி நேரமும் திறந்திருக்கும் வகையில் கழிப்பிடம் அமைக்க வேணடும்.

பாராளுமன்ற தேர்தலில் திமுக., கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த கூட்டத்தில், குன்னூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுதாகர், நகர செயலாளர்கள் மகேஷ், அப்பாஸ், துயில்மேகம், ஒன்றிய செயலாளர்கள் ெபரியசாமி, தீபக், சிவக்குமார், பாபு, துணை செயலாளர்கள் இளையபெருமாள், சிவானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vic. ,Administration ,panel meeting ,
× RELATED கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு...