×

சாதுக்கள் வலியுறுத்தல் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் பஞ்சாயத்து அலுவலகங்களில் ‘பிரவுசிங் சென்டர்’

சிவகாசி. மே 8: கிராமப்புற மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், பஞ்சாயத்து அலுவலகங்களில் இணையதளத்துடன் கணினி அமைக்க வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இன்றைய நவீன யுகத்தில் இணையதள வசதி அத்தியாவசியமாகி விட்டது. படிப்பு மற்றும் பொதுஅறிவு தொடர்பாக நமக்கு தேவையான தகவல்களை ஒரு நொடியில் பெறலாம். இணையதள இணைப்புள்ள கணியில், தேடுதளத்தில் நமக்கு தேவையானவற்றை பதிவு செய்தால், அது தொடர்பாக விபரங்களை தெரிந்துகொள்ளலாம். ஆனால், நகரங்களைப் போல, கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு இணையதள வசதி எட்டாக் கனியாக உள்ளது. இதனால், படிப்பு தொடர்பான சந்தேகம் மற்றும் பொதுஅறிவு குறிந்து தெரிந்துகொள்ள முடியவில்லை. இதற்காக கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புறங்களில் உள்ள பிரவுசிங் சென்டர்களுக்கு செல்கின்றனர். எனவே, கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் மாணவ, மாணவியர் பயன்படுத்தும் வகையில், இணையதள வசதியுடன் கணினியை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவியர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்த மாணவ, மாணவியர் கூறுகையில், ‘சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 58 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த பஞ்சாயத்து அலுவலகங்களில், இணையதள வசதியுடன் கணினியை ஏற்பாடு செய்தால், படிப்பு தொடர்பான தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், போட்டி தேர்வுக்கு மாணவ, மாணவியரும் தங்களுக்கு தேவையான பொது அறிவு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.  உலகத்தில் தினசரி ஏதாவது ஒரு புதிய விஷயம் வெளியாகி வருகிறது. இதனை அறிந்துகொள்ள, இணையதள வசதி தேவை. பஞ்சாயத்து அலுவலகத்தில் இணையதள வசதியுடன் பிரவுசிங் சென்டர் அமைத்துக் கொடுத்தால், அந்ததந்த ஊராட்சி செயலாளர்கள் கண்காணிப்பார்கள். இதற்கு மாதமாதம் செலவு மிக குறைவாகத்தான் வரும். பல்வேறு நிறுவனங்கள் குறைந்த விலையில் அன்லிமிட் டேட்டா வழங்கி வருகின்றன.

எனவே, கிராமப்புற மாணவ, மாணவியர் பயன்படுத்தும் வகையில் பஞ்சாயத்து அலுவலகங்களில் பிரவுசிங் சென்டரைப் போல அமைக்க வேண்டும்’ என்றனர். கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைதுசாத்தூர் அருகே, இருக்கன்குடி ரோட்டில் அதே கிராமத்தை சேர்ந்த சிவகுமார் (23), மாரிசெல்வம் (24) ஆகியோர் டூவீலரில் சென்றனர். இவர்களை பாளையம்கோட்டை நொச்சிக்குளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (26), முத்துப்பாண்டி (29), தளவாய் (20) ஆகியோர் அவதூறாக பேசி, கரண்டி, கம்பி, கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. மாரிச்செல்வம் புகாரின்பேரில் இருக்கன்குடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.மது விற்ற 2 பேர் கைதுசாத்தூர் வடக்குரதவீதியில் அனுமதியின்றி மதுவிற்ற, அதே ஊரைச் சேர்ந்த மாரிகண்னு (52) என்பவரை சாத்தூர் டவுன் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 18 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதேபோல, கண்மாய்ச்சூரங்குடி பஸ்நிறுத்தம் அருகே, அனுமதியின்றி மதுவிற்ற கோவிந்தராஜ் (51) என்பவரை, சாத்தூர் தாலுகா போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Tags : Sadhus ,panchayat offices ,
× RELATED கடலாடி ஒன்றியத்தில் புதிய பஞ்சாயத்து...