×

மின்வாரிய ஊழியர்கள் குமுறல் எழுமலை பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

உசிலம்பட்டி, மே 8:  எழுமலை பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜெயமாலு தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என திடீரென ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வில்  கடைகள், ஹோட்டல்கள், பிளாட்பார கடைகள், தள்ளுவண்டிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் சோதனை செய்தனர். அதில் ஒருமுறை பயன்படுத்தப்படும், கப்புகள், கேரிபை, தண்ணீர் டம்ளர்கள் உள்ளிட்ட மக்காத பிளாஸ்டிக்குகள், இருக்கின்றனவா என ஓவ்வொரு கடைகளிலும் ஆய்வு செய்தனர்.
அதில் பேருந்து நிலையம், தெற்கு ரதவீதி, முத்தாலம்மன்கோவில் பகுதிகளில் உள்ள கடைகளில் 10 கிலோ மக்காத பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,700 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இது சம்மந்தமாக பொதுமக்களுக்கு மாதிரி அங்காடிகள் திறக்கப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.


Tags : bosses ,area ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி