×

நீடாமங்கலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு 790 டன் ெநல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைப்பு


நீடாமங்கலம், மே 8: திருவாரூர் மாவட்டம் நீடாமங்லம், மன்னார்குடி பகுதியிலிருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு  நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ரயில் வேகன்களில் பொது விநியோக திட்டத்திற்கு அரிசியும், அரவைக்காக நெல் மூட்டைகளும் அனுப்பப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நேற்று  நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், இடையர்நத்தம். தெற்குநத்தம், தலையாமங்கலம், அசேசம், மூவாநல்லூர், ஆதனூர் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் மற்றும் சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலையில் இருந்து 63 லாரிகளில் 790 டன் சன்ன ரக நெல் மூட்டைகள்  நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 21 வேகன்களில்(ரயில் பெட்டி) புதுக்கோட்டை மண்டலத்திற்கு  அரவைக்காக தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Tags : Pudukottai ,Neemamangalam ,
× RELATED நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி...