கறம்பக்குடி அருகே அம்புகோவிலில் குடிநீர் மோட்டார் பீஸ் கேரியரை பிடுங்கி சென்றதால் சாலைமறியல்

கறம்பக்குடி, மே 8: கறம்பக்குடி அருகே அம்புகோவிலில் குடிநீர் மோட்டார் பீஸ் கேரியரை பிடிங்கி சென்றதால் சாலை மறியல் போராட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புகோவில் ஊராட்சியில் எராளமான கிராமங்கள் உள்ளன. இதில் கன்டியன்பட்டி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி செயல்பட்டு வந்தன.

இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி முழுவதும் பழுதடைந்த நிலையில், இருந்ததால் குடிநீர் தொட்டியானது முழுவதும் இடிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் நீண்டகால கோரிக்கைக்கு பிறகு மேல்நிலை நீர்தேக்க தொட்டி இருந்த இடம் அருகே சின்டெக்ஸ் தொட்டி மூலம் பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பொதுமக்கள் தண்ணீர்  பிடித்துகொண்டிருந்தபோது  தனி நபர் ஒருவர் மின் மோட்டார் இணைப்பில் உள்ள பீஸ் கேரியரை பிடுங்கி சென்றுள்ளார். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் பொதுமக்கள் உடனே தண்ணீர்  வழங்க கோரியும் அம்புகோவில் கிராமத்தில் உள்ள முக்கத்தில் சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி மக்கள் பயன்பெறும் வகையில் மேல் நிலைநீர் தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் குறிப்பாக பீஸ் கேரியரை பிடுங்கி சென்ற தனிநபர் ஒருவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்டியன்பட்டி பொதுமக்கள் காவல் துறை இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்தனர்.

Tags : drinking water motor carrier ,Ambukavil ,Karambukudi ,
× RELATED முக்கிய பிரமுகர்கள் வராத நிலையில்...