×

பொன்னமராவதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

பொன்னமராவதி, மே 8: பொன்னமராவதி ஒன்றியத்தில் பள்ளிசெல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. பொன்னமராவதி வட்டார வளமையத்திற்குட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி வீடுவீடாக பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் சார்ந்த கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. இப்பணி ஏப்ரல்8ல் துவங்கி மே 15ம்தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறன் குழந்தைகளில் 0 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகளில் 6 முதல் 18வயதிற்குட்பட்ட குழந்தைகளின் விபரங்கள், இடைநின்ற குழந்தைகள் மற்றும் தொடர்ந்து ஒருமாதமாக பள்ளிக்கு வருகை புரியாத குழந்தைகள் இக்கணக்கெடுப்பில் கண்டறியப்பட உள்ளனர்.

இக்கணக்கெடுப்பில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்குவாரி, மணல் குவாரி,தொழிற்சாலைகள் மற்றும் விவசாயங்கள் நடைபெறும் இடங்கள், வீடுவாரியான கணக்கெடுப்பில் குறிப்பாக பேருந்து நிலையம், உணவகங்கள், பழம், பூ காய்கறி அங்காடிகள் ஆகிய பகுதிகளில் சிறப்பு கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது. பொன்னமராவதி ஒன்றியத்தில் கடந்த 6ம்தேதி பாண்டிமான் கோவில் தெரு, மலையான் ஊரணி கரை, மாம்பழத்தான் ஊரணிகரை ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார், ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்பழகன், பரிசுத்தம், பச்சமுத்து, மதனகுமார், சரவணன், அழகுராஜா, சக்திவேல்பாண்டி, சரவணன், ரஹிமாபானு, புவனேஸ்வரி, சிறப்பாசிரியர்கள் தனலெட்சுமி, ரபேல்நான்சிபிரியா ஆகியோர் இக்கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் குடியிருப்புவாரியாக கணக்கு கிராம கல்வி பதிவேடு மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கணக்கெடுப்பு பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள குடியிருப்புகளில் எந்த ஒரு வீடும் விடுபடாதவாறு நடத்த வட்டார வளமைய மேற்பார்வையாளரால் திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது.


Tags : School CELLA Census ,Ponnamaravathi ,
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...