×

திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரியில் இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கான பயிலரங்கு

திருச்செங்கோடு, மே 8: திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில், இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கான பயிலரங்கு நடந்தது.
திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில், இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கான பயிலரங்கு 3ம் தேதி தொடங்கியது. இப்பயிலரங்கு 17ம் தேதி வரை நடைபெறும். செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை ஆகியவை இணைந்து இதனை நடத்துகின்றன. அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான, இந்த பயிலரங்கில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை.

மாணவர்களுக்கு அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் பல்துறை அறிவியல் பாடங்களில் பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கிறார்கள். தொழிற்சாலைகளுக்கு கூட்டிச்சென்று, நேரடியாக அதன் செயல்பாடுகள் குறித்து விளக்குகிறார்கள். இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இதன் தொடக்க விழாவில், கல்லூரி டீன் பாலதண்டபாணி, முதல்வர் ரவிக்குமார் மற்றும் பல்துறை அறிஞர்கள் கலந்து கொண்டனர். பயிலரங்க மலரும் வெளியிடப்பட்டது.  

Tags : student scientists ,Chengundai Sengunthar College ,
× RELATED திருச்செங்கோடு செங்குந்தர்...