×

சேந்தமங்கலம் முருகன் கோயிலில் கிருத்திகை விழா

சேந்தமங்கலம், மே 8: தாத்தகிரி முருகன், கோயில்ல் சித்திரை மாத கிருத்திகையை விழா நடந்தது. இதையெட்டி கணபதி பூஜையுடன் மூலவருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து துத்தங்கி சாற்றி மாலை அணிவிக்கப்பட்டு ராஜா அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,Senthamangalam Murugan Temple ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா