×

கருப்பு எள் விலை கிலோவுக்கு ரூ.16 குறைவாக ஏலம்

க.பரமத்தி, மே.8: கருப்பு எள் விலை கிலோவுக்கு ரூ.16குறைவாக ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கிராம புற பகுதியில் மானாவாரியாக எள், கம்பு, சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். நேற்று முன்தினம் 792கிலோ எடைக்காக நடந்த ஏலத்தில் கருப்பு எள் குறைந்த விலையாக கிலோ ரூ.110க்கும் அதிக பட்சம் ரூ.120க்கு ஏலம் போனது கடந்த வாரத்தை விட தற்போது கிலோவுக்கு ரூ.16குறைவாக ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதே போல சிகப்பு எள் குறைந்த விலையாக கிலோ ரூ.98க்கும் அதிக பட்சம் ரூ.116க்கு ஏலம் போனது கடந்த வாரத்தை விட தற்போது கிலோவுக்கு ரூ.9குறைவாக ஏலம் போனது.

Tags :
× RELATED தாந்தோணி ஒன்றிய பகுதியில் குடும்ப...