×

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் : எம்.பி.சு. வெங்கடேசன் ட்வீட்

சென்னை : நெல்லை நகரில் ரூ. 15 கோடியில் நவீன வசதிகளுடன் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு எம்.பி. சு. வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இந்நிலையில்  நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், “தமிழ்ப்பண்பாட்டின் வேர்களைத் தேடி கடல் கடந்து தொல்லியல் ஆய்வு நடைபெறும்.யாதும் ஊரே யாவரும் கேளிர் என வாழ்ந்த குடியின் வரலாறு அறிவியலிமதுரைன் துணையோடு மீட்டெடுக்கப்படும். வரலாறு பற்றிய, வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு நன்றியும் பாராட்டும். விதி 110 இன் கீழ் சமர்பிக்கப்பட்ட அறிக்கை, இந்திய வரலாற்றின் விதிகளை மாற்றும் அறிக்கையாகும்.புராணங்களை வரலாறு என பொய்யர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் வைகை, பொருநை என்று ஆற்றங்கரை தோறும் அறிவியல் துணையோடு உண்மையான வரலாறு மீட்டெடுக்கப்படுகிறது.கீழடியில் கண்டறியப்பட்ட வெள்ளி முத்திரை நாணயம் மெளரியர் காலத்திற்கு முற்பட்டது. பாண்டியனின் கொற்கை துறைமுகம் கி.மு எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. பொருநை நதி நாகரிகத்தின் காலம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. உரத்துச் சொல்வோம்! இந்திய வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்….

The post வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் : எம்.பி.சு. வெங்கடேசன் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.P.S. ,Venkatesan ,Chennai ,Nellai Nagar ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…