×

சமூக வலைதளங்களில் தனியார் பள்ளி பற்றி அவதூறு சைபர் கிரைமில் புகார்

திருச்செங்கோடு, மே 7: திருச்செங்கோடு   கோழிக்கால்நத்தம் ரோடு பகுதியில் தனியார் சிபிஎஸ்இ  பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கடந்த 2012ம்  ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏப்ரல், மே மாதங்களில், இந்த பள்ளியை குறித்து தொலைக்காட்சியில் வந்த செய்தியை திருத்தி, சமூக   வலைதளங்களில் மர்ம நபர்கள் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால்  ஒவ்வொரு  ஆண்டும் பள்ளியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக, பள்ளி நிர்வாகத்தினர்  தெரிவித்தனர்.

மேலும்,  இந்த ஆண்டும் பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக  ஊடகங்களில், இந்த பள்ளியை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.  இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர், நாமக்கல்  மாவட்ட எஸ்பி அருளரசு,  திருச்செங்கோடு டிஎஸ்பி   சண்முகம் மற்றும் திருச்செங்கோடு நகர  இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் ஆகியோரிடம் நேற்று புகார் மனு  அளித்தனர்.

இதுகுறித்து பள்ளியின் தாளாளர் ஹரி  நிவாஸ் கூறுகையில், ‘உரிய அரசு அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் எங்கள் பள்ளியை  பற்றி, சமூக ஊடகங்களில் அங்கீகாரம் இல்லை என தவறான தகவல்களை மர்ம  நபர்கள் பரப்பி வருகின்றனர். இதனால் எங்கள் பள்ளியின் வளர்ச்சி பெரிதும்  பாதிக்கப்படுகிறது. எனவே, அவதூறாக தகவல் பரப்புபவர்கள் மீது தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையில் புகார் அளித்துள்ளோம்,’ என்றார்.

Tags : private school ,
× RELATED பாளையங்கோட்டை தனியார் பள்ளியில்...