×

பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் பர்சை பதம்பார்க்கும் திருடர்கள்

ஒட்டன்சத்திரம், மே 7: ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் பயணிகளின் பர்ஸை பதம் பார்க்கும் திருடர்களால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு திருப்பூர், கோயம்புத்தூர், தாராபுரம், பழநி, திண்டுக்கல், மதுரை, வத்தலக்குண்டு, தேனி மார்க்கமாக ஒவ்வொரு நாளும் 800க்கும் மேற்பட்ட பஸ்களும், வெளியூர் உள்ளூர் பயணிகளும் வந்து செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம், ஒட்டன்சத்திரம் நகரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு வெளியூரை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், அரசு, தனியார் ஊழியர்கள் என தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வந்து செல்லும் பயணிகளிடம் திருடர்கள் பிக்பாக்கெட் அடிக்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பணம் இல்லாமல் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் திருடர்களின் அட்டகாசத்தை அடக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பயணிகள் கூறுகையில், ‘‘ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் நாளுக்கு நாள் திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கூட்டத்தை பயன்படுத்தி பணத்தை அடித்துச்சென்று விடுகின்றனர். இதனால் பொதுமக்கள், பயணிகள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் தினமும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்டில் சுற்றும் பிக்பாக்கெட் திருடர்கள் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

Tags : Passengers ,bus stand ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு