×

திண்டுக்கல்லில் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் தொடக்க விழா

திண்டுக்கல், மே 7: திண்டுக்கல்லில் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் தொடக்க விழா நடைபெற்றது. பிஎஸ்என்ஏ திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் பேசுகையில், ‘‘இந்த வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் அமைப்பு மூலம் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள பொதுச்சேவைகள் போல் தமிழகம் முழுவதும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். ’’ என்றார். விழாவில் ஆடிட்டர் சுபாஷினி, தணிக்கை துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி விளக்கி பேசினார். ஐஏஎஸ் பயிற்சி மைய நிர்வாகி சிபி, மாணவர்களிடம் அரசு துறைகளின் வேலை வாய்ப்பு மற்றும் அதனை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி பேசினார். வேலம்மாள் கல்வி குழும துணை தலைவர் கணேஷ் நடராஜன் நன்றி கூறினார்.

Tags : opening ceremony ,Vellammal Community Services ,Dindigul ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...