×

கஞ்சா விற்றவர் கைது

பந்தலூர், மே. 7: பந்தலூர் அருகே கீழ்நாடுகானி பகுதியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர். தேவாலா காவல் நிலையத்திற்குட்பட்ட கீழ்நாடுகானி பகுதியில் நேற்று எஸ்.ஐ., ஜெயபிரகாஷ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் கீழ்நாடுகானி பகுதியை சேர்ந்த கோபி என்கிற மோகன்ராஜ் (22) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Cannara ,soldier ,
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!