×

திருத்துறைப்பூண்டியில் அரசு ஊழியர் சங்க அமைப்பு தின விழா

திருத்துறைப்பூண்டி, மே 7: திருத்துறைப்பூண்டி வட்டக்கிளையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 36வது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டச்செயலாளர் மணிவண்ணன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் வட்ட இணைச்செயலாளர் தருமையன், பொருளாளர் தமிழ்ச்செல்வி, வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட தலைவர் கஜேந்திரன், வருவாய் கிராம உதவியாளர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் முருகானந்தம், ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க வட்ட பொருளாளர் நமச்சிவாயம், கருவூலத் துறை சங்க பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Government Employees Union Day Celebration ,Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார...