×

பொன்னமராவதி அருகே ஏனமாரியம்மன் கோயிலில் பால்குட விழா

பொன்னமராவதி, மே7: பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும் அக்னி பால்குட விழா நடந்தது.
கடந்த 5ம் தேதி இரவு வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. சுற்றுப்பகுதியி;ல் பொதுமக்கள் பால்குடம், பூத்தட்டுக்கள் எடுத்து வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று 6ம் தேதி மதியம் கோயில் முன்பு வளர்க்கப்பட்டிருந்த அக்னி க்குண்டத்தில் பால்குடம், காவடிகள் எடுத்து வந்த பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Festival ,temple ,Ponnaravarai ,
× RELATED கல்லுமலை கோயில் சித்திரை திருவிழா