கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் கோடைகால தண்ணீர் தொட்டி திறப்பு

கறம்பக்குடி, மே 7: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து பிற பகுதிகளுக்கு தினுமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பணி நிமி்ததமாக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் குறிப்பாக கறம்பக்குடி பேருந்து நிலையம் எந்த நேரத்திலும் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகம் காணப் படுகிறது. மேலும் குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலை உள்ளதால், பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் குடிநீருக்காக பெரிதும் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் குடிநீருக்காக அலையும் நிலை உள்ளதால்  குடிநீர் தேவையை சரிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கறம்பக்குடி பேரூராட்சி அலுவலகம் சார்பில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரிதும் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையத்தில் குடிநீர் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பேரூராட்சி அலுவலர்கள் திறந்து வைத்தனர். இதன் காரணமாக பயணிகள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர். தண்ணீர் தொட்டி திறந்து வைத்த பேரூராட்சி அலுவலர்களை பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாராட்டினர்.

Tags : Summer water tank opening ,bus stand ,Karambukudi ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...