×

மாசாணியம்மன் கோயிலில் பாதுகாப்பு குறித்த ஆலோசனை

பொள்ளாச்சி, மே 7:  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில்  பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.  இலங்கையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு ஆங்காங்கே நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலைய பகுதி, கோயில்  மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சியில் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்றான, ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால், பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  
 இந்நிலையில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் அலுவலத்தில் நேற்று, பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு, சென்னை போலீஸ் பாதுகாப்பு பிரிவு ஆய்வாளர் சேகர் தலைமை தாங்கினார். கோயில் செயல் அலுவலர் ஆனந்த் முன்னிலை வகித்தார். வால்பாறை டிஎஸ்பி., விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், கோயில் கண்காணிப்பாளர் தமிழ்வாணன் மற்றும் வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறையை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தின்போது போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், மாசாணியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். சந்தேகம்படும்படியான நபர்களை கண்டால் உடன் தகவல் தெரிவிக்க வேண்டும். கோயிலை சுற்றிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து செயல்பட்டில் இருக்க வேண்டும். முக்கிய விசேஷ நாட்களில் பாதுகாப்பை பலப்படுத்த, கூடுதல் போலீஸ் நியமிக்கப்படும்’ என்றனர்.

Tags : Masaniamman ,
× RELATED கலெக்டர் தகவல் க.பரமத்தி சூடாமணி...