×

கலெக்டர் தகவல் க.பரமத்தி சூடாமணி மாசாணியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

க.பரமத்தி, ஜன. 31: கரூர் சின்னதாராபுரம் நெடுஞ்சாலையில் 29வது கிலோ மீட்டரில் சூடாமணி மாசாணியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினசரி அபிஷேகங்கள் முக்கிய விரத நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய விரத நாட்களில் மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மக திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இந்த திருவிழாவையொட்டி கடந்த 24ம் தேதி தை அமாவாசையன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களால் 24ம் ஆண்டு பூக்குழி (தீமிதி) திருவிழா நடத்த தேதி நிச்சயிக்கப்பட்டு மாசாணி அம்மனுக்கு கங்கணம் கட்டப்பட்டு கொடியேற்றுதலுடன் விழா தொடங்கி கம்பம் நடப்பட்டு அருகே முளைப்பாரி இடப்பட்டுள்ளது. தொடர்ந்து தினசரி மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு தினசரி மாலை வழிபாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி (தீமிதி) இறங்க பக்தர்கள் கங்கணம் கட்டிக் கொள்ள 4ம் தேதி கடைசி நாள் என்று விழா குழுவினரால் கூறப்படுகிறது.

தொடர்ந்து சக்தி கரகம் பாலிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன் ஆனமலையில் இருந்து புனிதநீர் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு மாசாணியம்மனுக்கு பல்வேறு பூஜைகள் வழிபாடு நடத்தப்பட உள்ளது. 8ம் தேதி (சனிக்கிழமை) அம்மனுக்கு நகை மற்றும் அலங்காரப் பொருள்கள் மேளதாளம் முழங்க கொண்டு வரப்பட்டு பூக்குழி குண்டம் ஸ்தாபிதம் செய்யப்படுகிறது. மறுநாள் 9ம் தேதி (ஞாயிறு) காலை எல்லைமேட்டில் இருந்து அக்னி கரகம், சக்தி அலகு, பெண்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்ததும் தொடர்ந்து பூக்குழி (தீமிதி) இறங்க கங்கணம் கட்டிய பக்தர்கள் பூக்குழியில் இறங்கி பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்ற உள்ளனர். அன்றைய தினம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாசாணியம்மன் அறக்கட்டளை மற்றும் கதர்மங்கலம், எல்லைமேடு ஊர்பொதுமக்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Collector Information K. Paramathi Sudamani Masaniamman Temple ,Pookkali Festival Backup ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்