×

இணையதள சேவை தடையின்றி கிடைக்க ேகாரி அஞ்சல் ஊழியர்கள் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, மே 3: கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் அனைத்து கிராமங்களிலும் தடையின்றி இணையதள சேவை கிடைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அஞ்சல் துறையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஒருங்கமைப்பு முறையில் இணையதள தொழில்நுட்ப பிரச்னை காரணமாக அஞ்சல் 3ம் பிரிவின் ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றியும் பணிகள் முழுமையடையாமல் சிரமம் ஏற்படுகிறது என்றும், இதனால் ஒருங்கமைப்பு திட்டத்திற்கான இணைய சேவை பிரச்னை தீரும் வரை பழைய முறையை தொடர உத்தரவிட வேண்டும் என்றும், அனைத்து கிராமங்களிலும் தடையின்றி இணையதள சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர்கள் 3ம் பிரிவு ரெங்கசாமி, 4ம் பிரிவு முருகன், கிராமப்புற ஊழியர் சங்கம் மணி ஆகியோர் தலைமை வகித்தனர். கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்க மாநில தலைவர் ராமராஜ், கோட்ட செயலாளர்கள் 3ம் பிரிவு அருள்ராஜன், 4ம் பிரிவு பெரியசாமி, கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கம் பாலசுப்பிரமணியன், அஞ்சல் சேமிப்பு கட்டுப்பாட்டு பிரிவு மண்டல செயலாளர் கேசவன் ஆகியோர் பேசினர்.

Tags : Internet service providers ,demonstration ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் சுமை...