×

10ம் வகுப்பு தேர்வில் கோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

சங்கரன்கோவில், மே 3:  சங்கரன்கோவில் கோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தாலுகா அளவில் முதலிடம் பிடித்துள்ள இப்பள்ளியில் மாணவி லிரினா 488 மதிப்பெண்களும், கனகவள்ளி 487 மதிப்பெண்களும், பூர்ணரதி 484, கோகுல்முருகன் 484, மகாலிங்கம் 482, மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். இதில் மாணவிகள் லிரினா, கனகவள்ளி ஆகியோர் கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். பள்ளியில் தேர்வு எழுதிய 131 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இதில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 72 பேரும், 450க்கு மேல் 42 பேரும் எடுத்துள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி செயலர் திலகவதி, முதல்வர் பழனிசெல்வம், நிர்வாக இயக்குநர் ராஜேஸ்கண்ணா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags : Gomati Ampal Matriculation School ,
× RELATED பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும்