திருச்செங்கோட்டில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, மே 3:  தொழில்நுட்ப குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி,  திருச்செங்கோடு கிளை அஞ்சல் ஊழியர்கள்  சங்கங்களின் சார்பில், திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டத்தலைவர் மாதேஸ்வரன், துரைசாமி, கிளை தலைவர்  பொன்னுசாமி ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். கிளை செயலாளர்கள் விஜயகுமார், ஜெகதீஸ்வரன், ராமச்சந்திரன், முன்னாள் கிளை செயலாளர் சுப்ரமணியன்,  ஜோதி ஆகியோர் கலந்துகொண்டு, அலுவலகங்களில் தொழில்நுட்ப குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி  பேசினர். கிளை உதவித் தலைவர்  சந்திரசேகர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 20 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Mail staff ,Tiruchengode ,
× RELATED திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்