×

மஞ்சூரில் நாளை மருத்துவ முகாம்

மஞ்சூர், மே 3: மஞ்சூரில் ஜீரண மண்டல தனிச்சிறப்பு மருத்துவ முகாம் நாளை  நடக்கிறது. மஞ்சூரில், நீலகிரி மாவட்டம் குந்தா ரோட்டரி சங்கம், கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை இணைந்து ஜீரண மண்டல தனிச்சிறப்பு மருத்துவ முகாம் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. உணவு செரிமானவியல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வேங்கடகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பரிசோதனை, ஆலோசனைகள் வழங்குகின்றனர். மேலும், சிறப்பு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குந்தா ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் லட்சுமணன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : Medical Camp ,Manchur ,
× RELATED கால்நடை மருத்துவ முகாம்