×

முத்துமாரியம்மன் கோயிலில் 5ம் தேதி குண்டம் திருவிழா

ஊட்டி, மே 3:  ஊட்டி அருகே செலவிப்நகர் கிராமத்தில் உள்ள முத்துமாாியம்மன் கோயிலில் 24ம் ஆண்டு திருவிழா மற்றும் 11ம் ஆண்டு பூ குண்டம் திருவிழா ஆகியவை இன்று காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நாளை அம்மன் அலங்கார பூஜை, ஊர்வலம், மாவிளக்கு பூைஜ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5ம் தேதியன்று பகல் 1 மணியளவில் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், 2 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, மாலை 4 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Muthuramaniyamman ,
× RELATED கோயில் திருவிழாவில் இரு...