×

காரைக்குடி பகுதியில் நிதி ஒதுக்கப்பட்டும் சாலை போடாத அவலம் போராட்டம் நடத்த தொழில் வணிகக்கழகம் தயார்

காரைக்குடி, மே 3: காரைக்குடி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பகுதிகளில் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரை பணிகள் துவங்காததை கண்டித்து தொழில் வணிகக்கழகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. பணி முடிந்த பகுதிகளில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சாலை போடப்பட்டுள்ளது. மேலும் பணி முடிந்த பகுதிகளில் சாலை அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கு என டென்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு ஒர்க் ஆர்டரும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலை காரணம் காட்டி பணிகளை நிறுத்தி வைத்திருந்தனர். தேர்தல் முடிந்து பல நாட்களாகியும் பணிகள் துவங்கவில்லை. இதனை கண்டித்து தொழில் வணிகக்கழகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தொழில்வணிககக்கழக தலைவர் சாமிதிராவிடமணி கூறுகையில், பாதாள சாக்கடை திட்டம் முடிந்துள்ள 71 தெருக்களில் சாலை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சாலை பணிகளை உடனடியாக துவங்க வேண்டும். மேலும் காலதாமதம் செய்தால் அடுத்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு செய்தால், இன்னும் பணிகளுக்கு தடைவரும். தவிர பருவமழை காலமும் வரஉள்ளதால் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்த 71 சாலைகளில் பணிகளை இன்னும் 10 நாட்களில் துவங்க வேண்டும். இல்லையெனில் தொண்டு நிறுவனங்கள், அனைத்து கட்சியினருடன் சேர்ந்து போராட்டம் நடத்தப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. அரிமா சங்க நிர்வாகி கண்ணப்பன், ரோட்டரி சங்க செயலாளர் கந்தசாமி, மனவளக்கலை மன்ற நிர்வாகி சையது உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் குழுவாக சென்று மனு அளித்தனர்.

Tags : business conglomerate ,area ,Karaikudi ,road crackdown ,
× RELATED காரைக்குடியில் கிணற்றுக்குள் விழுந்த மாற்றுத்திறனாளி இளைஞர்..!!