அரசு இணையத்தள சர்வர்கள் முடக்கம்: உலக புத்தக தின விழா

காரைக்குடி, மே 3: காரைக்குடி அருகே புதுவயல் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தக கண்காட்சி நடந்தது. வாசகர் வட்ட செயலாளர் நூலகர் செல்வம் வரவேற்றார். டாக்டர் சையது பக்ருதீன் தலைமை வகித்தார். சாக்கோட்டை போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் புத்தக கண்காட்சியை துவக்கிவைத்தார். ஆசிரியர்கள் ஜீவானந்தம், சாந்தகுமார், சுவாமிதுரை, கிருஷ்ணன், ஜெயபிரகாஷ், அருள்ராஜ், மெய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலகத்தின் பெருமைகள் குறித்து கருத்தரங்கம் நடந்தது. பக்ருதீன் அலி சார்பில் ரூ.6 ஆயிரத்துக்கு நூல் அடுக்குள், முத்துக்கண்ணன் சார்பில் சேர், கிருஷ்ணன் சார்பில் மேஜை நன்கொடையாக வழங்கப்பட்டது. ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

× RELATED மானாமதுரை அருகே குழாயில் சொட்டு...