×

கொடைக்கானலில் தேசிய அளவிலான கராத்தே போட்டி

கொடைக்கானல், மே 3: தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் கொடைக்கானல் கேபிஎஸ் பள்ளியில் நடந்தது. திண்டுக்கல் கராத்தே அசோசியேஷன் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் கர்நாடகா, பஞ்சாப், பாண்டிச்சேரி, கொல்கத்தா உள்ளிட்ட இந்திய அளவில் இருந்தும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் 300க்கும் அதிகமான கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர். வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டது. 7 வயது முதல் 15 வரை வயது வரை ஜூனியர் பிரிவாகவும், 19 வயதிலிருந்து இருந்து 21 வயது வரை சீனியர் பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கராத்தே போட்டிகளில் கட்டா முறை போட்டியும் குமித்தே எனப்படும் சண்டையிடும் போட்டியும் நடத்தப்பட்டன.

அகில இந்திய டிராகன் சோட்டோ கான் அமைப்பு தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். திண்டுக்கல் கராத்தே அசோசியேசன் தலைவர் பிரசாத் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எபக்ட் அமைப்பின் தலைவர் வீரபத்திரன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார். போட்டிகளில் நடுவர்களாக அறிவழகன், பிரம்மோஸ் கண்ணன், வினோத், தங்கப்பாண்டி, சரவணபாண்டி, அன்பு, ராஜா, தினேஷ், சுப்பிரமணி உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags : National Karate Competition ,Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்