×

கந்துவட்டி கொடுமையால் பாதிப்பு கட்டிட கான்ட்ராக்டர் மனைவி, மகன்களுடன் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு

திருவண்ணாமலை, மே 3: கத்து வட்டி கேட்டு கொடுமை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்ேகாரி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், கட்டிட கான்ட்ராக்டர் மனைவி மற்றும் மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.செங்கம் தாலுகா, காயம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன்(40), கட்டிட கான்ட்ராக்டர். இவரது மனைவி அன்புராணி(35). மகன்கள் வில்சன்(17), விஜயராஜ்(15). இந்நிலையில், மணிவண்ணன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார்.தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக மனுவை அதிகாரிகள் வாங்க மாட்டார்கள், அதற்காக வைத்துள்ள பெட்டியில் மனுவை செலுத்துமாறு அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அதன்படி, மனுவை பெட்டியில் செலுத்திவிட்டு வெளியே வந்த மணிவண்ணன், திடீரென பிளாஸ்டிக் கேனில் மறைந்து கொண்டு வந்த மண்ணெண்ணையை தன் மீதும், குடும்பத்தினர் மீதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.உடனடியாக, அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து, தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து காப்பாற்றினர். அவர்களிடம் இருந்த மண்ணெண்ணை கேன் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், மணிவண்ணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிவித்ததாவது:கட்டிட கான்ட்ராக்டர் தொழில் முதலீட்டுக்காக, செங்கத்தை சேர்ந்த சக்திவேல், ஆறுமுகம் உள்ளிட்ட 6 பேரிடம் கடன் வாங்கினேன். கடன் பெறும்போது தெரிவித்த வட்டியைவிட, கந்து வட்டி கேட்டு தற்போது மிரட்டுகின்றனர். வீட்டுக்கு வந்து கொடுமை செய்கின்றனர். கொலை மிட்டல் விடுப்பதால் அச்சமாக உள்ளது.இது தொடர்பாக, போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைதீர்வு கூட்டத்திலும் ஏற்கனவே மனு அளித்திருக்கிறேன். எனவே, வேறுவழியின்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து, தீக்குளிக்க முயன்ற நான்கு பேரையும், விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். தற்கொலைக்கு முயற்சிப்பது சட்டவிரோதம் என தெரிவித்த போலீசார், நான்கு பேரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை...